.
.

.

Latest Update

ப்ரியதர்ஷனின் கதைக்கு தன் இசை மூலம் வலு சேர்க்கும் இசைஞானி இளையராஜா…


pizap.com14449837243651சில சமயங்களில் சில படங்கள் அறிவிக்கப்படும் போதே எதிர்ப்பார்ப்பை தூண்டும். அந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணம் அந்த படத்தில் சங்கமித்து இருக்கும் திரை உலக ஜாம்பவான்கள் தான். பிரபு தேவா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து think big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சில சமயங்களில்’ அத்தகைய ஒரு படம் தான் என்பதுக் குறிப்பிடத்தக்கது. ப்ரியதர்ஷனின் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் , ஸ்ரேயா ரெட்டி , அசோக் செல்வன் ஆகியோருடன் இயக்குனரின் கதைக்கு தன் இசை மூலம் வலு சேர்க்கும் இசை அமைப்பாளர் இளைய ராஜா இணைந்து இருப்பது ‘ சில சமயங்களில் ‘ படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது. வெவ்வேறு தளங்களில் ,களங்களில் படம் இயக்கும் ,தேசிய அளவில் மிக பிரபலமான ப்ரியதர்ஷன் இந்தப் படம் மூலம் சர்வதேச திரை உலக அரங்கின் கவனத்தை ஈர்க்க உள்ளார். சமீபத்தில் ‘சில சமயங்களில்’ படத்தை இளையராஜாவுக்கு திரையிட்ட ப்ரியதர்ஷன் இசை அமைக்க இளையராஜாவின் ஒப்புதலை கேட்டு இருக்கிறார்.படம் பார்த்த இசை ஞானியும் படத்தின் உயர்ந்த தரம் குறித்த தன் கருத்தை தெரிவித்த பின்னர்,’சில சமயங்களில்’ படத்துக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டார். ‘சில சமயங்களில்’ திரைப்படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு இதன் மூலம் .மேலும் கூடும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் டாக்டர் கணேஷ், ஏ எல் அழகப்பன் , மற்றும் அமலா பால் விஜய்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles