கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் .
அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஸன் கலந்த காமெடி திரைப்படம் “ ப்ருஸ் லீ “. தெலுங்கில் பிரபல நடிகையான கீர்த்தி கர்பண்டா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முனிஸ் காந்த் , மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் இப்படத்தை அடுத்த வாரத்தில் சென்சாருக்கு அனுப்பவும், இப்படத்தை வருகிற நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்தில் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பான கதாபாத்தில் நடித்துள்ளார். ….