காமெடி கலக்கல் படம் மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும் “ விந்தை “ லாரா இயக்குகிறார்
காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா / இசை – வில்லியம்ஸ் பாடல்கள் – பாரதி, பொன்முத்துவேல் / கலை – பத்து / எடிட்டிங் – நதிபுயல் நடனம் – தினா / தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி நிர்வாக தயாரிப்பு – பொன்ராஜ்
இணைதயாரிப்பு – R.Y.ஆல்வின், R.Y.கெவின்
தயாரிப்பு – R.L.யேசுதாஸ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது ….. இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கொடைக்கானலில் மகேந்திரன் – மனீஷாஜித் பங்கேற்ற பாடல் காட்சியான
“ கனவில் ஓர்
உருவமே ! அது எனக்கு பிடிக்குதே “ என்று இருவரும் ஆடிப் பாட டான்ஸ் மாஸ்டர் சங்கர் நடன அமைப்பில் படமாகப் பட்டது.
இரண்டு மணிநேரம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது..இன்றைய சினிமாவே மக்களை எண்டர்டைன் பண்ண வைக்க வேண்டும். என்ற பார்முலாவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை தான் நானும் பாலோ செய்யறேன்.
படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் லாரா.