.
.

.

Latest Update

“மனோ பாலா” தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்து வருகிறார். பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ..


வெற்றிகரமான இயக்குனராக, நடிகராக தமிழ் திரையுலகில் சோபிக்கும் மனோ பாலா, ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் மூலம் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்து, அதிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக உருவெடுத்து உள்ளார். அந்த படத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய இரண்டாவது படமான ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்து வருகிறார். பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பாம்பு சட்டை படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த படப்பிடிப்பு தடைப் பட்டது . தற்போது பாம்பு சட்டை படத்தின் உரிமையை பிரபல விநியோகஸ்தர் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரன் வாங்கி இருக்க, மீண்டும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் தொடங்க இருக்கிறது.

“நான் பார்த்த சில காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. கால தாமதம் இந்த படத்தின் தரத்தை சற்றும் குறைக்கவில்லை.அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இந்த படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறார். ரசிகர்களின் ரசனைகளை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் மனோ பாலா சார்… நிச்சயமாக அவர் தேர்வு செய்திருக்கும் இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ‘பாம்பு சட்டை’ படத்தை நாங்கள் அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து வெளியிட இருக்கிறோம். தயாரிப்பு துறையில் நாங்கள் அடியெடுத்து வைப்பதற்கு ‘பாம்பு சட்டை’ திரைப்படம் சிறந்ததொரு அஸ்திவாரமாக அமையும் என பெரிதும் நம்புகிறோம்…:” என்று கூறினார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles