பல உயிர்கள் பறிபோவதே அதனால் தான்.
வேண்டும் போதெல்லாம் பணம் எடுக்க
வசதி செய்து கொடுத்த வங்கிகள் மனிதனின்
பாதுகாப்பை பலப்படுத்தியதா?
பதிவு செய்யத்தெரிந்த கேமிராவுக்குப்
பாதுகாக்கத் தெரியுமா?
எனவே திரும்பப் பெறமுடியாத உயிர்களை மதிப்போம்!
இந்த கருத்தை கதைகருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே “மய்யம்”
நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு ஆபத்தாகிறது என்பதை சமுக அக்கறையுடன் கூறியுள்ளனர் மய்யம் குழுவினர்.
ஹார்வேஸ்ட் எண்டர்டெயின்னர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்சண்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 27 அறிமுக கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர், அதில் 12 பேர் தற்போது பயின்று கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள் என்பது இப்படத்தின் தனி சிறப்பாகும்.
Against ATM Murder என்ற தலைப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒவியத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி அவர்கள் கையொப்பமிட்டு மய்யம் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மிகவும் தேவையான கருத்தை மக்களுக்கு சொல்லும் மய்யம் திரைப்படம் 16 அக்டோபர் அன்று திரைக்கு வரவிருக்கிறது.