.
.

.

Latest Update

மறு பிறவி எடுக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’


தனுஷின் சகோதரர் நடிக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’

மறு பிறவி எடுக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’

இன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.

‘கதிரவனின் கோடைமழை’ அப்படி ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப்படம், மார்ச்2016-ல் வந்த படம்.அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் பேசப்படாமல் வரவேற்கப்பட்ட படம்.

ஆனால் திரையரங்குகள் கிடைக்காத பிரச்சினையால்அந்தப்படம் பாதிக்கப்பட்டது. அதனால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்து இருக்கிறது.

கதிரவன் இயக்கத்தில் கண்ணன், (ஸ்ரீபிரியங்கா இப்போது ஸ்ரீஜா) இமான் அண்ணாச்சி நடித்த படம் தான்’கதிரவனின் கோடைமழை’
. யாழ் தமிழ்த்திரை சார்பில் கு.சுரேஷ்குமார். த.அலெக்ஸாண்டர் தயாரித்திருந்தனர்.

எங்கிருந்தோ வரும் ஒருவரால்தான் எல்லாவற்றிற்கும் விடிவு பிறக்கும்.ராமனால் அகலிகை சாப விமோசனம் பெற்றது புராணக்கதை. அப்படி வந்தவர் தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ9’ சுரேஷ், அவர் இப்படத்துக்கு நேர்ந்த கதியை அறிந்தவர், படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிறார்.

படத்தைப் பார்த்தவர் ” படம் சலிப்பூட்டவில்லை. நான் இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதை எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.நல்லபடியாக இந்தப்படத்தைக் கொண்டு சேர்த்தால் ஓடும். நானே வெளியிடு கிறேன். ”என்றிருக்கிறார்.

படம் வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் கதிரவன் பேசும் போது ‘பேரன்பு என்பது பெருங்கோபத்தைவிட ஆபத்தானது’ என்பதைச் சொல்கிற கதை.படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழல்தான் எல்லாரையும் மாற்றுகிறது.

அதிக அன்பு கொண்ட அண்ணனும் தங்கையும் படத்தின் பிரதானம் என்றாலும் கதையில் காதலும் உள்ளது.

இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன். அதாவது கஸ்தூரிராஜாவின் தம்பி சேதுரா மனின் மகன். அதாவது தனுஷுக்கு தம்பி உறவு. நாயகியாக வரும் ஸ்ரீபிரியங்காதான் தங்கை. அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார். ” என்கிறார் படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கதிரவன். இவர் பிரபுதேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர் .

முழுப்படமும் சங்கரன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதிப்படம் கோடைக் காலத்திலும் மறுபாதிப்படம் மழைக்காலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கவிஞர் வைரமுத்து மெட்டுக்கு மட்டுமல்ல எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தும் பாடல்கள் எழுதியுள்ளது புதிய முயற்சி. படத்திலுள்ள நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். இசை சாம்பசிவம். பின்னணிஇசை பவன்.

இப்படம் பல பகுதிகளில் வெளியாகவே இல்லை. சில ஊர்களில் சனி. ஞாயிறு காலைக் காட்சி என்று சுருங்கிப் போனது. மறுபிறவி எடுத்துள்ள இப்படம் இப்போது சில திருத்தங்களு டன் புது அவதாரம் எடுத்து வெளிவருகிறது.

”மரித்ததை உயிர்ப்பிப்பதைப் போல மறுபிறவி எடுக்கவைத்துள்ளர் ‘ஸ்டுடியோ9’ சுரேஷ்சார். இதன் எல்லாப் பெருமையும் அவருக்கே ” என்கிறார் இயக்குநர் கதிரவன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles