“மாயா” மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடம் “மாநகரம்”
புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை “மாயா” நிரூபித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது. ஆர்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்படம் மூலம் தமிழ் திரை உலகில் கால்பதித்துள்ளது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்.
”மாயா” படத்தை தொடர்ந்து “மாநகரம் ” ரெண்டாவது படைப்பாக தொடர்கிறது இந்நிறுவனம்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர் பிரமிப்போடு பார்க்கும் சென்னை போன்ற மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படி பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது… அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே “மாநகரம்”
இந்த நான்கு பேர் கதையிலும் ஓர் உள்தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு “ஹைபர்லிங்” என்னும் புதுவித திரைக்கதையை த்ரில்லிங்காக அமைத்துள்ளார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறும்பட இயக்குனரான இவரின் முதல் படைப்பு இது.
அந்த நான்கு பேராக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ராமதாஸ் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு : செல்வகுமார்,
ஸ்டண்ட் : அன்பறிவு,
இசை : ஜாவித்,
தயாரிப்பு : பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்,
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக முடிவடைந்தது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.