எஸ். தணிகைவேல் வழங்கும், ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், “அங்காடி தெரு” மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “இரவும் பகலும் வரும்”
வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் பாலஸ்ரீராம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.
பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன்.
காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே “இரவும் பகலும் வரும்” படத்தின் கதை.
இப்படம் திரையிடுவதை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் வென்ற படத்தயாரிப்பு தரப்பு, வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளது.
படத்திற்கு இசை தீனா, ஒளிப்பதிவு கிருஷ்ணசாமி. படத்தொகுப்பு – வி.டி.விஜயன்.