நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும்,திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக் கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘அஞ்சல’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், நந்திதா விமலுக்கு ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சல’ படத்தின் விநியோக உரிமையை பெற்று இருப்பவர் Auraa சினிமா மகேஷ் கோவிந்தராஜ்.ரசிகர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்தின் இசை அமைப்பாளர் என்பது பிரதானம்.Bangalore days, என்னு நிண்டே மொய்தீன் ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளைக் கொண்ட இசை இவருடையது. அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும் , 19 ஆம் தேதி இசை வெளியீடு அதை தொடர்ந்து வெகு விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ‘அஞ்சல’ என்றுக் கூறினார் தயாரிப்பாளர் திலிப் சுப்புராயன்.