.
.

.

Latest Update

“முத்துக்குமார் வான்ட்டேட்” இசை வெளியீட்டு விழா


unnamed (3)சென்னை ஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கை அமரன்,பெப்சி சிவா,இயக்குநர் அரவிந்த்ராஜ்‌,ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர்,இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்,கே..எஸ்.ஜி.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்குமார்‌,பி.ஜெகதீஷ்‌,சி.டி.பாண்டி,அசோக் லோதா,நடிகர் செளந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் டிரைலரை நடிகர் ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக்கொண்டார்.

இசைத்தகட்டினை கங்கை அமரன் வெளியிட பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பெற்றுக்கொண்டார்

விழாவில் பேசிய கங்கை அமரன்‌, மலேசியாவிலிருந்து வந்திருக்கும் இந்தப்படக்குழுவினர், இங்கு தமிழ் வெற்றி பெற வேண்டும், முன்பெல்லாம் மலேசிய வாசுதேவன் போன்றோர் இங்கு வெற்றி பெறுவதற்கு கஷ்டப்பட்டார்கள்‌.ஆனால் இப்போது தமிழ் சினிமாவின் டிரண்ட் மாறிவிட்டது. திறமையுள்ளவர்கள் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இப்படக்குழுவினரும் வெற்றி பெற்று தமிழ்சினிமாவின் உச்சத்தை அடைய வேண்டும் என வாழ்த்தினார்
இதனைத்தொடர்ந்து பேசிய ராதாரவி,குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டார். பெரிய பட்ஜெட் படங்கள் எளிதாக வெற்றி பெறுவதில்லை என்றும் காரணம் உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது எனக் கூறினார். இதனால் அதுபோல் அல்லாமல் சிறிய பட்ஜெட் படங்கள் எடுத்து வெற்றி பெற கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை நடிகர்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

unnamed (2)சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திப்ப முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆனந்திக்கு நிச்சியதார்த்தம் நடைபெறுகிறது. அன்றையதினம் ஒரு பரிசுப்பெட்டகத்தை அனுப்பிய முத்துக்குமார் அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக்கொள்ளும்படி ஒரு கடிதத்தையும் இணைத்துள்ளார். அப்படி ஏர்ப்போட் வரத்தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும் அக்கடிகத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனந்தி ஏர்ப்போட் செல்கிறாள். ஆனால் அதற்கு முன்பே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி, அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா ? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக்கொண்டாளா என்பதை நகைக்சுவை கலந்து விறுவிறுப்புடன் இயக்கியுள்ளார் இயக்குநர் M.பத்மநாபன். இப்படத்தை இந்தியன் டிரீத் தியேட்டர்ஸ் சார்பாக முனியாண்டி கேசவன் மற்றும் R. வேல்சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles