.
.

.

Latest Update

முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்


முன்னோட்டத்தை ராஜதந்திரமாய்வெளியிடும் ராஜதந்திரம் படக்குழுவினர்

சன் லாண்ட் சினிமாஸ்மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் S சேகர் நடிப்பில் AG அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் “ராஜதந்திரம்”
படத்தின் பெயருக்குஏற்றாற்போல படகுழுவினரும் ராஜதந்திரமாய் தான் செயல்பட்டுவருகிறார்கள்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர்.
மேலும் இப்படத்தின்முழு முன்னோட்டத்தை இளைய தளபதி விஜய் அவர்களின் மூலமாக, அவரது டிவிட்டரில் வெளியிடுகின்றனர்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு முன்னோட்டம் டிவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவேமுதல் முறை.
படத்தின் டிசர் மற்றும்டிரைலர்வெளியிட்டவர்கள் மற்றும் வெளியிடயிருப்பவர்கள் விவரம் பின்வருமாறு:
1. படத்தின் கதை கருவைஉணர்த்தும் டிசரை, டிசம்பர் 14 அன்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் தனது டிவிட்டர்மூலமாக வெளியிட்டார்.
2. படத்தின் கதாநாயகியானரெஜினா கெசன்ராவின் சுபாவத்தை வெளிபடுத்தும் டிசரை, டிசம்பர் 15 அன்று நடிகை சமந்தாதனது டிவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
3. அஜய் பிரசாத் நடித்தகதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டிசரை, டிசம்பர் 15 அன்று நடிகை குஷ்பு தனதுடிவிட்டர் மூலமாக வெளியிட்டார்.
4. டர்புக்கா சிவாநடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டிசரை, டிசம்பர் 16 அன்று நடிகர் பிரேம்ஜிஅமரன் தனது டிவிட்டர் மூலமாக வெளியிட்டார்
5. இளவரசு நடித்த கதாபாத்திரத்தின்சுபாவத்தை வெளிபடுத்தும் டிசரை, டிசம்பர் 16 அன்று நடிகர் / இயக்குனர் வெங்கட்பிரபுதனது டிவிட்டர் மூலமாக வெளியிட்டார்
6. நடிகர் கிருஷ்ணாஅவர்கள் தன் தந்தை பட்டியல் S சேகர் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும்டிசரை, வரும் டிசம்பர் 17 அன்று தனது டிவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.
7. நடிகர் சிம்பு அவர்கள்இப்படத்தின் கதாநாயகன் வீரா தோன்றும் டிசரை, வரும் டிசம்பர் 17 அன்று தனது டிவிட்டர்மூலமாக வெளியிடவுள்ளார்.
8. இளைய தளபதி விஜய்அவர்கள் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை (டிரைலர்) வரும் 18 அன்று தனது டிவிட்டர் மூலமாகவெளியிடவுள்ளார்.
முன்னோட்டத்தை வெளியிடும்படக்குழுவினரின் வித்தியாசமான மற்றும் விமர்சையான அணுகுமுறை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.படம் ஜனவரியில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles