கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கப்போவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை தமீம் பிலிம்சும், பி.டி.செல்வகுமார் இவர் விஜய்யின் பிஆர்ஓ என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சியிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதால்தான் இந்த அரிய வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விஜய். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய் கதாபாத்திரத்துக்கு மயிலு ஸ்ரீதேவி நடிக்கவிருக்கிறார். மகன் விஜய் கதாபாத்திரத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு வில்லனாக நான் ஈ புகழ் சுதீப் நடிக்கிறார்.
மாரீசன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. படப்பிடிப்பு இம்மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை ஈசிஆரில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செட் போட்டுவிட்டார் கலை இயக்குநர் முத்துராஜ்.
இந்த படத்தை முடித்த கையோடு விஜய் டிவி மகேந்திரன், ஆடிட்டர் சண்முகம் இணைந்து தயாரிப்பாளர் தாணு அவர்களுடன் இணைந்து ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்கத்தில் இப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படம் அட்லீக்கு கிடைக்க நயன்தாரா தான் முக்கிய பங்காற்றியுள்ளாராம். அட்லீ படத்தில் நடித்தால் நான் கதாநாயகியாக நடிக்க தயார் என்று சொன்னாராம் நயன், இதனால் அடுத்த வருட இறுதியில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்பின் சுப்ரமணியபுரம் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகருமான சசிக்குமார் இயக்கத்திலும் விஜய் நடிக்கப்போகிறார். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.