அதிபர் படத்தை தயாரித்த T.சிவகுமார் தனது பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் நிறுவனம் சார்பில் அடுத்து தயாரிக்கும் படத்தை இயக்குனர் செல்வா இயக்குகிறார். இயக்குனர் செல்வா இயக்கும் 26 வது படம் இது.
இந்த படத்தில் மூன்று முன்னணி நாயகர்கள் நடிக்க இருகிறர்கள், நாயகிகள் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் T.சிவகுமாரே எழுதி இருக்கிறார். அதிபர் படத்தின் கதை இவரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தவிர டிசம்பரில் ஒரு படமும், ஜூன் மாதத்தில் ஒரு படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார்.