.
.

.

Latest Update

மூன்று வெவ்வேறு வேடங்களில் ஜெய் நடிக்கும் பேய் படம்!


Jaiவித்தியாசமான வேடங்களில் நடித்து இதுவரை தன்னை ஒரு இயக்குனரின் நடிகனாக வெளிக் காட்டி வரும் ஜெய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு பேய் கதை ஆகும். அடுத்த வீட்டு பையன் என்ற இமேஜ் உடைய ஜெய் தனக்கு கிடைக்கும் எல்லா வேடங்களிலும் சோபிக்கக் கூடியவர் என்பதில் திரை உலகினர் இடையே ஒருமித்தக் கருத்து உண்டு. அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக நடிக்கும் படம் ஒரு பேய் படமாகும்.இந்தப் படத்தை தயாரிப்பவர்கள் 70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர். அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.1989 முதல் 2016 வரை உள்ள காலக்கட்டத்தை பிண்ணணியாக கொண்டுத் தயாரிக்கப் படும் இந்தப் படம் கொடைக்கானலில் படமாக்கப் பட உள்ளது.

சரவணன் ஒளிப்பதிவைக் கவனிக்க,ரூபன் படத்தொகுப்பு செய்ய,திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில்,ஷெரிப் நடனம் அமைக்க,உருவாகும் இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles