ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நடித்து வெளிவரவிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு, திரைப்படத் தயாரிப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்ப தாவது: வடசென்னை மக்களின் வாழ்வை மையமாக வைத்து ‘கருப்பர் நகரம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டன. இப்படத்துக்காக இதுவரை ரூ.3 கோடி வரை செல விட்டுள்ளேன்.இந்நிலையில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரவுள்ள ‘மெட்ராஸ்’ படத்தின் விளம் பரத்தைப் பார்த்தேன். நான் தயாரிக் கும் ‘கருப்பர் நகரம்’ படக் கதையில் உள்ளதை அப்படியே சித்தரிக்கும் வகையில் ‘மெட்ராஸ்’ படம் உள்ளதாக அறிகிறேன், இந்தப் படம் வெளியானால் நான் பாதிக்கப்படுவேன். ஆகவே, இந்தப் படத்தை வெளியிட நீதி மன்றம் தடை விதிக்க கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக ‘மெட்ராஸ்’ படத் தயாரிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.