.
.

.

Latest Update

மேஜிக் பிரேம்ஸ் தயாரிக்கும் விஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “


4. Hero & Heroine Combination Stills (2)சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் “ இது என்ன மாயம் “
இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மற்றும் நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா, பாலாஜிவேணுகோபால், ஆர்,ஜே.பாலாஜி, அஜெய் டைடஸ், சுதாக்ஷினி ஐயர், காவ்யாஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நிரவ் ஷா / இசை – G.V.பிரகாஷ்குமார் / பாடல்கள் – நா.முத்துகுமார்
படத்தொகுப்பு – ஆண்டனி / கலை – செல்வகுமார் / நடனம் – ஷோபி, காயத்திரிரகுராம், சதீஷ், ஷெரிப், சப்னா சிஸ்டர்ஸ் / சண்டை பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தலைமை செயல் அதிகாரி – சக்திவேல்
தயாரிப்பு – R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்
படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்.. இது காதல் சம்மந்தப்பட்ட படம் தான்..காதலுங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம்..அது யாருக்கு வருகிறது..அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது..ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதை தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு காலகட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை… இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான். அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம்பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட காதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லாம். நான் நிரவ் ஷா, G.V.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக.
இந்த வெறியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக என்றார் இயக்குனர் விஜய்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles