.
.

.

Latest Update

‘மேரே சப்னோ கி ராணி’ ஹிந்தி பாடலுக்கு வடிவேலு-சதா நடனம்..!


IMG_1820சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஸ்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வைகைப் புயல் வடிவேலு மற்றும் சதா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘எலி.’

1969-ம் ஆண்டு பிரபல இந்தி திரைப்பட நடிகரான ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூருடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆராதனா’. இப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற பாடல் இந்தியா முழுவதிலும் பிரபலமான பாடல்.

சாகாவரம் பெற்ற பாடல் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் இப்போது வடிவேலுவின் இந்த ‘எலி’ படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தி தயாரிப்பாளரிடத்தில் முறையாக உரிமம் பெற்று, நடன இயக்குனா தாராவின் நடன இயக்கத்தில் வடிவேலுவும், சதாவும் இப்பாடலுக்கு நடனமாட, மூணாறில் இந்தப் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ஒரு தமிழ் படத்தில் ஒரு முழு இந்தி பாடல் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும், வடிவேலுவும், சதாவும் நடனமாட ‘கொள்ளை அழகு கொட்டி கிடக்கு’ என்ற கிளப் பாடலுக்கு பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணியின் கை வண்ணத்தில் ஐந்து பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.

இப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி சூப்பர் சுப்புராயனின் சண்டை பயிற்சியில் நகைச்சுவை பின்னணியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles