மைலாஞ்சி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் கலையரசன்
மெட்ராஸ் படத்தில் தன் தனித்துவமான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் பலரது பாராட்டையும் பெற்ற கலையரசன், “மைலாஞ்சி” என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ரேகா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல எழுத்தாளரான அஜயன்பாலா கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குனர் விஜய்யுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை அமைக்கிறார் அஜயன்பாலா.
கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கான கதாநாயகி தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தங்கர்பச்சன் இப்படத்தில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:
படத்தொகுப்பு – கோபி
பாடல் வரிகள் – நா.முத்துக்குமார்
கலை இயக்குனர் – ஆரோக்கியராஜ்