.
.

.

Latest Update

மோகன்லால் – கவுதமி நடிக்கும் “ நமது “


மோகன்லால் – கவுதமி நடிக்கும்
“ நமது “
மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு படம் தயாராகிறது. தெலுங்கில் அந்தப் படத்திற்கு “ மனமன்தா “ என்றும் தமிழில் “ நமது “ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.
சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப் படுவதுண்டு.
மற்றும் விஸ்வநாத் – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.
மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடிமாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவ்
இசை – மகேஷ் சங்கர்
தயாரிப்பு – ரஜினி கோரப்பட்டி
எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்.
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles