மலையாள திரை உலகில் இருந்து தமிழ் திரைக்கு வரும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. மம்மூட்டியின் மகன் Dulquer Salmaan , நிவின் பாலி ஆகியோருக்குக் கிடைக்கும் வரவேற்ப்பு மற்ற நடிகர்களுக்கும் இங்கு வரக் காரணமாகி கொண்டு இருக்கிறது. காதலுக்கு மரியாதை, வருஷம் 16, மற்றும் பல்வேறுப் வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாசிலின் மகனான பஹாத் பாசில் தமிழில் அறிமுகமாக இருக்கும் அடுத்த நாயகன் ஆகிறார்.
தனக்கென பொருந்தும் கதாப் பாத்திரத்தில், கதையின் போக்கை நிர்மாணிக்கும் பாத்திரமாக இருந்தால் போதும் , கதாநாயகனாக இல்லாமல் போனாலும் சரி என்று நடிக்கும் பஹாத் பாசில் மொழி பிராந்தியங்களையும் தாண்டி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்ட இருக்கிறார்.அவர் நடித்த ‘ மகேஷிண்டே பிரதிகாரம்’ சென்னையில் மட்டுமே ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது என்பதுக் குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் அவருக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும் என்பதற்கு இதுவே சான்று.
பஹாத் தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவா கார்த்திகேயன் -நயன்தாரா நடிக்கும் பெயரிடப் படாத ,பெரிதும் எதிர்பார்க்க படும் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகக் கூறுகிறார் பாஹாத் பாசில்.
‘தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு.அதிலும் ‘தனி ஒருவன்’ படம் பார்த்தப் பின்னர் நான் என்னையே மறந்து விட்டேன் என சொல்லலாம்.நேர்த்தியான இயக்கம், அருமையானக் காட்சி அமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குனர் மோகன் ராஜாவின் உழைப்பு என்னை பொறுத்த வரை மேல் நாட்டு இயக்குனர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன். இப்பொழுது அவர் படத்தின் மூலம் நான் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு மட்டற்ற பெருமை. மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதுக் கூட.என்னுடையக் கதாப் பாத்திரம் தமிழ் திரை உலகில் நீங்கா இடம் பிடித்து பிடித்து நீடிக்க உதவும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார். 24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் இந்த பெயரிடப் படாதப் படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப் படும் படமாகும்.