KDFC’s கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் ‘யோக்கியன் வாரான்; செம்பை தூக்கி உள்ள வை’ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
வெளியுலகம் தெரியாத இரண்டு கிராமங்களுக்கிடையே பகையாகி பிரச்சனையானால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. இப்படி உள்ள கிராமங்களில் ஒரு கிராமத்தை சேர்ந்த பொண்ணும், இன்னொரு கிராமத்தைச் சேர்ந்த பையனும் காதலிக்கிறார்கள். இவர்கள் தங்களது கிராமத்தின் பரம்பரை பகையையும் மீறி எப்படி இணைகிறார்கள் என்பதுதான் இந்த காமெடி கலந்த காதல் படத்தின் மையக் கரு.
இப்படத்தில் விஜய் R.நாகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரியா மேனன் மற்றும் டைட்டில் நாயகன் யோக்கியனாக சிங்கம் புலி, தென்னவன், சுப்புராஜ், நெல்லை சிவா, ஹலோ கந்தசாமி, வெங்கல் ராவ், போண்டா மணி மற்றும் பல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். வில்லனாக ரோஷன் நடித்துள்ளார்.
படத்தில் மொத்தம் 6 பாடல்கள். ஒரு பாடலை இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியனே எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பாடலுக்கு கானா உலகநாதன் நடனம் ஆடியுள்ளார். மேலும் தவசிமணி எழுதிய ஒரு பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், ராஜபாளையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம் பெறுகிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
எழுத்து – இயக்கம் – சுவாமி ராஜ்
ஒளிப்பதிவு – கிச்சாஸ் / வெண்ணிலா சரவணன்
இசை – ஆதிஷ் உத்ரியன்
பாடல்கள் – தவசிமணி, ஆதிஷ் உத்ரியன், வெண்ணிலா சரவணன்
நடனம் – கல்பனா
சண்டை பயிற்சி – திரில்லர் முகேஷ்
மக்கள் தொடர்பு – S. செல்வரகு
தயாரிப்பு – KDFC’s கிரியேஷன்ஸ்