தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களின் லிஸ்டில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார் அதனை தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார்.
தற்போது இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் புலி படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் இவருடன் பிரபு, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி இரண்டு படத்தில் பாடிய பாடல்கள் ஹிட்டாகிய நிலையில் புலி படத்திலும் ஒரு பாடல் பாட வேண்டுமென இளைய தளபதி விஜய் ரசிகர்கள் விரும்பியதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய புலி படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் இளைய தளபதி