.
.

.

Latest Update

ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வேண்டுகோள்


பெரும் மோசடி செய்துள்ள அகி மியூசிக் வெளியிடும் எனது சிடிக்களை வாங்க வேண்டாம் – ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வேண்டுகோள்

சமீபத்தில் இளையராவின் பாடல்களை முறைகேடாக பயன் படுத்திவந்த மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் உட்பட இன்னும் சில நிறுவனத்திற்கும் சென்னை உயர் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அந்த செய்தி சில நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் வெளி வந்தது நினைவிருக்கலாம். ஆனாலும் நீதி மன்ற உத்தரவை மதிக்காமல் பல்வேறு வழிகளில் இளையராஜாவின் பாடல்களை விற்று வருவதாகத் தெரிகிறது.

இளையராஜாவை ஏமாற்றும் நோக்கத்துடன் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு எல்லோரையும் மோசடி செய்து வரும் அகி நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் மோசடிக்கு தன் ரசிகர்கள் பலியாகக் கூடாது என்று ரசிககர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகம் முழுதும் வசித்து வரும் அன்பான என் ரசிகர்களே, நான் இசைமைத்த பலவேறு படங்களின் பாடல்களை மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் என் அனுமதி இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்து வருகி்றார்கள்.

இப்படி பல ஆண்டுகளாக விற்று வரும் அகி நிறுவனம் எனக்கு சேர வேண்டிய ராயல்டியையும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. இதனால் எனக்கு பெரிய அளவில் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றம் அகிலன் லட்சுமணன் நிறுவனத்திற்கு தடை உத்தரவு போட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து பாடல்களை விற்பனை செய்து வருவதாக அறிகிறேன்.

அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”

-இவ்வாறு அந்த அறிக்கையில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இளையராஜா.

”இளையராஜாவிற்கு சொந்தமான இசையை தனக்குதான் சொந்தம் என்று வெற்று வாதம் செய்யும் அகிலன் லட்சுமணனின் கனவு ஒரு நாளும் பலிக்காது. அவரது இசை உல்கம் முழுதும் உள்ள இசை ரசிகர்களுக்கே சொந்தமானது” என்று இசைஞானி ஃபேன்ஸ் கிளப் துணைத் தலைவர் ஆல்பர்ட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles