ஜாம்பவான்களின் மத்தியில் பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.டேவிட்-கோலியாத் கதையை மீண்டும் மேடை ஏற்றியது போல் அமைத்துள்ளது என திரையுலகம் கூறிவருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார், கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள GV பிரகாஷ் குமார் .அதே வேளையில், தனது குடும்பத்திற்கே உண்டான பணிவுடனும், அமைதியுடனும் ரசிகர்களுக்கு தனது நன்றியினை வெளிபடுத்தியுள்ளார்.
“ எனக்கு தங்கள் ஆதரவை , அன்பை அளித்து வரும் ஊடக மற்றும் ரசிகர் நண்பர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. நான் நடித்துள்ள ‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு என்னை நெகிழ செய்கிறது. பெரும் ஆனந்தத்திற்கு அப்பாற்பட்டு, நல்ல படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற பொறுப்பையும் தந்துள்ளது. அரும்பாடு பட்டு எனது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். அனைவருக்கும் இதயம்கனிந்த எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என நம்பிக்கையோடு கூறினார் G.V. பிரகாஷ் குமார்.