வில்லன் ஆசையை நிறைவேற்றிய இயக்குனர் என்றே சொல்லலாம் பிரகாஷ்ராஜ் ஆசையை தான்,
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் போலீசாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். இதைத்தவிர, ரஜினியின் எந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் முழுமையாக நடிக்கவில்லை.
ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை அட்டகத்தி யாகவே போகி விடும் என வருத்தப்பட்ட வில்லனின் ஆசையை நிறைவேற்றிய அட்டகத்தி இயக்குனர்
‘லிங்கா’ படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த், இறுதியாக ரஞ்சித் கதையில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
ரஜினியை வைத்து ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜை படக்குழுவினர் அணுகியதாகவும், அதில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.
-கிருஷ்ணா புத்திரன்