.
.

.

Latest Update

‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’


‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறது ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’

அனிரூத் இசையமைத்து, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் அந்தஸ்தானது, நாளுக்கு நாள் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு திகில் படமாக தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் ‘ரம்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை, ஹைதராபாத்தை சார்ந்த ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’, ஒரு பெருந்தொகைக்கு வாங்கி இருக்கிறது. ஆந்திராவில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக வளம் வந்து கொண்டிருக்கும் ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ ஏற்கனவே ‘சிங்கம் 3’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘டோரா’ ஆகிய படங்களின் உரிமையையும் பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஹாரர் படமாக உருவெடுத்து வரும் ரம் திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் அனிரூத்தின் இசை தான். இவர் இசையமைத்து பாடிய ‘ரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஹோலா அமிகோ’, இசை பிரியர்களை மட்டுமில்லாமல் அனைத்து இளைஞர்களையும் அதிகளவில் கவர்ந்துவிட்டது. ஒரு ஹாரர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பது இது தான் முதல் முறை…அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கத்தில், ஹ்ரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த்திருக்கும் இந்த ‘ரம்’ திரைப்படமானது தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் ‘ரம்’ படத்தின் தெலுங்கு உரிமையை, ‘சிங்கம் 3’ மற்றும் ‘டோரா’ படங்களின் உரிமைகளை வாங்கியுள்ள ‘சுராக்ஷ் எண்டெர்டைன்மெண்ட் மீடியா’ நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அனிரூத்தின் இசை எங்களுக்கு பக்கபலமாய் அமைந்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்…மேலும் பல சுவாரசியங்களை ‘ரம்’ படத்திற்காக நாங்கள் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்…’ என்று ஆற்றலுடன் கூறுகிறார் இளம் தயாரிப்பாளரும், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளருமான விஜயராகவேந்திரா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles