சமுக நலனில் மிகுந்த அக்கறையுடன் மௌனமாக மக்கள் சேவை நடத்திவருகிறார் நடிகர் விஷால். அவர் நடிக்கும் ”மருது” என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடந்து வருகிறது. ராஜபாளையம் நகராட்சி பிரதமரின் தூய்மை இந்தியா மற்றும் தமிழக முதல்வர் தொழில் நோக்கு திட்டத்தின் படி, நகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்திய அரசு நகராட்சி உதவியுடன் ராஜபாளையம் ஸ்ரீவல்லிப்புத்தூர் பகுதிகளில் சுகாதார முறையில் செப்டிக் டேங்க் வசதியுடன் விடு தோறும் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அரசின் மானியம் கிடைத்தாலும் கட்டுமான பணிக்கு அதற்குமேல் செலவாகும் பணத்திற்கு வழியில்லாமல் ஊர் மக்கள் திகைப்பது விஷாலின் கவனத்திற்க்கு சென்றது, அதனை தொடர்ந்து விஷால் தன் சக நடிகர்களான நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் சூரி ஆகியோருடன் அந்த பகுதியை பார்வையிட்டு பண உதவி தேவைப்படும் பத்து பேரை தேர்ந்தெடுத்து உதவி தொகையான ரூபாய் 80 ஆயிரத்தின் காசோலையை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் சான்றோரிடம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் படக்குழுவினர்களும் தங்களது பங்கை அளித்தனர் . விஷால் ஊர் மக்களுக்கு தன்வார்வதுடன் உதவி அளிக்க முன்வரவே ஊர் முக்கியஸ்தவர்களும் உதவி அளிக்க முன் வந்து அவர்கள் 200 ற்கும் மேற்பட்ட கழிவறை கட்டிக்குடுக்க முன்வந்தனர் . விஷால் இந்த பொது நல பணியில் ஈடுபடவே இந்த திட்டம் வெற்றி பெற பல இடங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ராஜபாளையம் நகராட்சி வட்டாரங்கள் தெரியபடுத்தியது, மேலும் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் ஒருங்கிணைத்த ஊர் முக்கியஸ்தர்கள்,
சமுக சேவகர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு விஷால் ஊக்கமளிதுள்ளனர். விஷாலை முன்மாதிரியாக எடுத்து பலரும் இங்கு பண உதவி செய்ய முன்வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.