ஒளிப்பதிவாளர் திரு.ராஜீவ் மேனனால் கடந்த 2௦௦6 ம் ஆண்டு திரைப்படங்களில் சிறந்த ஒளிப்பதிவாளர்களை
உருவாக்குவதற்காக துவங்கப்பட்டது.மிக குறைந்த காலத்தில் சிறந்த தொழில்நுட்பக்கல்லூரியாக பெயர் பெற்றது
இப்போது வரும் மே 6ம் தேதி முதல் நடிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக நடிகர்/இயக்குனர் திரு.பிரதாப் போத்தன்,நடிகை செல்வி.அர்ச்சனா (இரு முறை தேசிய விருது பெற்றவர்) மற்றும் நடிகர் திரு.தலைவாசல் விஜய் ஆகியோரின் வழிகாட்டுதலோடு 6 மாத நடிப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
இதற்காக ராஜீவ்மேனன் தனது நேரடி மேற்ப்பார்வையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்துள்ளார். அவ்வாசிரியர்களின்
தலைவராக நடிகர் திரு. தேவேந்திரநாத் சங்கரநாராயணன் இருப்பார்.