.
.

.

Latest Update

ராடன் மீடியா வழங்கும் தாமரை – மெகா தொடர்


ராடன் மீடியா வழங்கும் தாமரை – மெகா தொடர்

உங்கள் சன் டிவியில், மதிய நேர தொடர்களில் ராடான் மீடியா ஒர்க்ஸ் வழங்கும், மாபெரும் வெற்றி தொடர் இளவரசி 1250 எபிசொடுகளை கடந்து, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியுடன், வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து ராடன் மீடியா ஒர்க்ஸ், அதே நேரமான மதிய 1.30 மணிக்கு தினமும் திங்கள் முதல் சனி கிழமை வரை தாமரை என்கின்ற புதிய மெகா தொடரை ஒளிபரப்ப உள்ளது.
நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் வாழ்க்கை சிக்கலையும், அதனால் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்ல போவது தான், இக் கதையின் சாராம்சம். இதுவரை எந்த ஒரு மெகா தொடரிலும் தொடாத ஒரு பிரச்சனையை முன் நிறுத்தி, இந்த மெகா தொடர் தாமரையின் கதை களம் அமைந்துள்ளது. இத் தொடரை காணப் போகும் தாய்மார்கள் இத் தொடரில் வரும் பிரச்சனைகள், தங்கள் வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பதாக, அவர்களை உணர வைக்க போவதாக, இதன் கதாசிரியர் சவால் விட்டு இத்தொடருக்கான் திரைக்கதையை அமைத்துள்ளார். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கு ஒரு புது அர்த்தத்தை கொடுத்திருக்கிறார் இதன் கதாசிரியர்.
ராடன் மீடியா ஒர்க்ஸ்சின் ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ் திருமதி. R.ராதிகா சரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த புதிய தொடரின் இயக்குனரும் கதாசிரியரும் இனணந்து இந்த குடும்பத் தொடருக்கு புதிய மெருகை ஏற்றியுள்ளனர். பல உணர்ச்சி பூர்வமான போராட்டங்களையும், திடீர் திருப்பங்களையும் உள்ளடக்கிய இத்தொடர் இமாலய வெற்றி அடைவது நிச்சயம் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். உங்கள் சன் டிவியில் தினமும் திங்கள் முதல் சனி கிழமை வரை பகல் 1.30க்கு, வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி முதல் தாமரை தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது. காண தவறாதீர்கள்.

நடிகர்கள்
அஸ்வின், நீலிமா ராணி, சாய்லதா T.V.வரதராஜன், L..ராஜா, பபிதா, சாய் பிரசாந்த், ஸ்ரீராம்பார்த்தசாரதி, ஸ்வப்னா, சாம்பவி, ஸ்ரீதர், ராணி, ஜெய்ராம் இவர்களுடன் நிரோஷா… மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
கதை மற்றும் திரைக்கதை : தேவி பாலா
வசனம் : பிரசன்னா
ஒளிப்பதிவு : விக்ரமன்
இயக்கம் : M.K. அருந்தவராஜா B.Com DFA
ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ் : திருமதி R.ராதிகா சரத்குமார்
தயாரிப்பு : ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிட்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles