.
.

.

Latest Update

ரெட் ஜெயின்ட் மூவிஸின் 12வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.


னது ஒவ்வொரு படத்தின் மூலமும் மாறுபட்ட கதையம்சங்களை கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் இயக்குனர் சுசீந்திரன் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது.

உதயநிதியுடன் விஷ்ணு விஷால் ஒன்றாக இணைந்து நடிக்கும் இந்தப் படம் ‘மன்மதன் அம்பு’, 7ஆம் அறிவு’, ஒரு கல் ஒரு கண்ணாடி’, போன்ற வெற்றி படங்களை தந்த ரெட் ஜெயின்ட் மூவிஸின் 12ஆம் திரைப்படம் ஆகும்.

‘தள்ளி போகாதே’ பாடல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ‘மஞ்சிமா மோகன்’ இந்த திரைப்படத்தில் உதயநிதியுடன் கை கோர்த்துள்ளார். மேலும், பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் ‘ஒரு பக்க கதை’ கதாநாயகி ‘மேகா ஆகாஷ்’, இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளது படத்தின் வண்ணத்தை கூட்டுகிறது.
இதோடு படத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும் வண்ணமாக D இமானின் இசையும், R மதியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் அவர்களின் படத்தொகுப்பும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles