கால்டாக்சி ஒட்டுனரான ஹீரோ ரேடியோ ஜாக்கியான ஹீரோயினை தனது காரில் அழைத்துச் செல்கிறான். பயணத்தின்போது, இருவரும் முரண்படுகிறார்கள். பிறகு ஹீரோ தன்னுடைய ஃபேன் (Fan)என தெரிந்து கொண்ட ஹீரோயின் அன்பாக பேச, அதை ஹீரோ தவறுதலாக புரிந்து கொள்கிறான்.
இந்தகட்டத்தில் ஒருபெரிய அதிர்ச்சியையும் ஹீரோயினுக்கு ஏற்படுத்துகிறான். ஹீரோவின் இந்த செயல் பாடுகளுக்கு இடையில், சிட்டி போலிஸ் கமிஷ்னர் ஹீரோவை தேடுகிறார் ஒரு சீரியல் கொலை விஷயமாக.
இப்படி ஏகப்பட்ட அழகான சிக்கல்களும், அதிர்ச்சிகளும் கலந்து சொல்லும் கதை “ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10)“. முடிவில் ஒரு மிகமிக அழகான முடிவு மனதை நெகிழவைக்கும். இப்படத்தின் முடிவு நம்மை சிந்திக்க வைத்து பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
லவ், திரில்லர், காமெடி கலந்த ஒரு கவிதையாக இருக்கும் இப்படம்…