சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி வழங்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் படப்பிடிப்பு மகாபலிபுரம் அருகில் உள்ள தனலெட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் பூஜையுடன் துவங்கியது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. விழாவில் நடிகர் சத்யராஜ் கிளாப் அடிக்க, ஆர்.பி.சௌத்ரி துவங்கி வைக்க லாரன்ஸ் நடிக்க முதல் காட்சி படமாக்கப் பட்டது. மற்றும் விழாவில் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன், டி.சிவா, கோவைசரளா, சதீஸ், படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ், சூப்பர் சுப்பராயன், ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.