சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கிகல் ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பிராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், சாம்ஸ், வி.டி.வி.கணேஷ், காக்காமுட்டை ரமேஷ், சரண்தீப், வம்சி, பாவாலட்சுமணன், சரத், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி, இசை – அம்ரீஷ், வசனம் – ஜான் மகேந்திரன், பாடல்கள் – விவேகா, சொற்கோ, லோகன்
கலை – வி.செல்வகுமார், நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், சண்டை – சிறுத்தை கணேஷ், எடிட்டிங் – பிரவீன். கே.எல், தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன், பாக்யராஜ், இணை இயக்கம் – சோழன், உதய் சந்திரன், திரைக்கதை, இயக்கம் – சாய்ரமணி, இணை தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி.
இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.