.
.

.

Latest Update

லிங்கா-தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி


Lingaa Movie Audio Success Meet_25லிங்கா படத்தின் தெலுங்குப்பதிப்பு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று (08.12.2014) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்கப்பட முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லுஅரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்குப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் லிங்கா படத்தின் கலைஞர்களான ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனி ரத்னா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லிங்கா விழாவில் ரஜினி உரையாற்றினார்…

“புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாளுக்கு முன்னாடி நடந்த நிவாரணநிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னாலவரமுடியலை.அப்பஎங்க குடும்பத்துல நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியால வர முடியாமப்போயிடுச்சி.அதுக்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும்.சென்னைக்குப்போன பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னோட நிதியுதவியை வழங்கறேன்.
சுமார் நான்கு வருடங்கள் கழிச்சி நான் நடிச்சிருக்கிற ‘லிங்கா’ படம் வெளிவரப்போகுது. நடுவுல வந்த ‘கோச்சடையான்’ படம் அனிமேட்டட் படம், நேரடியா நான் நடிச்சி வர்ற படம் ‘லிங்கா’.
ஒரு ஆறு மாசத்துக்குள்ள இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய படத்தைக்கொடுக்கிறது நடக்க முடியாத ஒரு விஷயம்.பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய டெக்னீஷயன்கள் பங்கு பெற்றிருக்கிற படம் கறஅர்த்தம்இல்லை.இந்தப்படத்தோட கதை பெருசு, இந்தப்படத்தோட பின்னணி பெருசு. சுதந்திரத்துக்கு முன்னாடி 40கள்ல நடக்கிற கதை.இப்போ நடக்கிற கதை.
ஒரு மிகப்பெரிய அணைகட்டறதப்பத்தின கதை, டிரெயின் சண்டைக்காட்சிகள், யானைகள், குதிரைகள், ஒரு 60, 70 சீன்படத்துல இருந்தால், அதுல 40 சீன்ல 1000 பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட காலத்துக்குள்ள இந்தப்படத்தை முடிச்சிருக்கோம்னா இயக்குனர் ரவிக்குமார், அவரோட யூனிட்
மற்றும் தயரிப்பாளர் ஆகியோர் தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை.ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம்.ஆனால், டெக்னீஷியன்ஸ் தான் ரொம்பகஷ்டப்பட்டாங்க.
இந்தப்படத்துல மூணு ஆச்சரியங்கள் இருக்கு.
முதல்ஆச்சரியம்டெக்னீஷியன்கள்.ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிசியனாவங்க.அது படம் பார்க்கும் போது உங்களுக்குத்தெரியும்.
இரண்டாவது ஆச்சரியம்.இந்தப்படத்தோட கதை என்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணுபடிச்சேன்.ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் ,அதை நாலு பேரு அவங்ககதைன்னு சொன்னாங்கன்னா, நான் போய் அந்தப்படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப்படத்துல மிகச்சிறப்பான கதை இருக்கு.அந்த நாலு பேரோட கதை இல்லை இது, இந்தப்படத்தோட கதை பொன் குமரனுடையது.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சகதை, இதை மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக்கிடைச்ச பாக்கியம்.
மூணாவது ஆச்சரியம் என்னன்னா…நான் இந்தப்படத்துல ரொம்பக்கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்.அது வந்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சது கிடையாது.டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதெல்லாம் கூட கிடையாது.இங்க இருக்கிறவங்களோட டூயட் பாடினது தான் அந்தக்கஷ்டம்.சத்தியமா சொல்றேன், சோனாக்ஷிகூட டூயட் பாடினதுலாம் ரொம்பக்கஷ்டம்.சின்னக்குழந்தையா இருக்கும் போது சோனாக்ஷியப்பார்த்த்து.என் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா கூடவளர்ந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வேர்த்துக்கொட்டிடுச்சி.என் முதல் படம் ‘அபூர்வராகங்கள்’ படத்துல நடிச்சபோது கூட அந்த
அளவுக்கு டென்ஷன் இருந்ததில்லை.கடவுள் நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை
கொடுக்கணும்னு நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக்கொடுக்கலாம்.
கேமராமேன் ரத்தினவேலு கூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு.நான் ரஜினிகாந்தை ரொம்பக்கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கன்னு சென்னையில நடந்த இசை விழால சொன்னாரு.நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷம் கிட்ட ஆகிடுச்சி.ஒரு சீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிச்சிக்கொடுத்திருக்கோம்னு சொல்வேன்.
ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது.அங்கெல்லாம் ஒரு படம்
ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி
மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கயும் சொல்லலாம். ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான
படம்.அது இரண்டு பாகம் எடுக்கிற படம், அதை நான் பார்த்திருக்கேன், அது வேற படம்.இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள்.அவர் இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா வருவாரு.தெலுங்கு
மக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம்.நான் வெளிப்படையா சொல்றேன், ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ரவிகுமார் இந்தப்படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு.ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப்படத்தை எடுக்கக்காரணமா இருந்தாரு.அனுஷ்கா, சோனாக்ஷி,
அப்புறம் ஜெகபதி பாபு.திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன்.அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன்.
இந்தப்படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பாப்பிடிக்கும்.தமிழ் மக்கள் என் படத்தைப்பார்த்து எனக்கு
எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதே மாதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப்படத்துக்கும் அதே மாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன்.தயாரிப்பளார் அல்லு அரவிந்த், அடுத்தபடம் எப்பன்னு கேட்டாரு, கதை இன்னும் ரெடியாகலைன்னு சொன்னேன்.முதல்ல சிரஞ்சீக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்ப நாளா அவர் காத்திட்டிருக்காரு.
இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெறும்னு நம்பறேன்…நன்றி…

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles