.
.

.

Latest Update

லிப்லாக் சீன் பின்னிடும் என அபார சந்தோசப்பட்ட இயக்குனர்…


Nermugam Movie Stills (2)“இயக்குனர் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து நேர்முகம் என்னும் படத்தை இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்”.

ஹைடெக் பிக்சர்ஸ் சார்பாக ரஃபி தயாரிக்கிறார். நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தில் பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா மற்றும் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.மனிதர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை சொல்லும் படம் தான் இந்த ’நேர்முகம்’. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தீர்வுக்காக எங்கு செல்கிறார்கள்? அவர்களுக்கு என்ன நேர்கிறது? என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்‌ஷன், கிளாமர் கலந்து செம கமர்சியல் மசாலாவாக உருவாகி வருகிறது.

Nermugam Movie Stills (10)இளைஞர்களையும் , காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்குமாம்.
காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் முக்கிய ஜோடிகளாக ரஃபியும் மீனாட்சியும் நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டுக்குள் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஒரு பெரிய போராட்டமே நடத்துகின்றனர். அந்த வாழ்வா சாவா நிமிடங்களில் ஒரு அழுத்தமான முத்தக் காட்சி இருந்தால் நன்றாக இருக்குமென இயக்குனர் முரளி கிருஷ்ணா முடிவெடுத்தார். கதை சொல்லும்போது இக்காட்சி மீனாட்சியிடம் சொல்லப்படாததால் முதலில் அவரிடம் சொல்லி அவர் சம்மதம் வாங்குவது எனவும், சம்மதித்தால் லிப்லாக் காட்சி வைத்துவிடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் வைக்கப்படும் லிப்லாக் காட்சி சத்தியமாக விரசமாக இருக்காது என அவரிடம் விளக்குவதற்கு என உதவி இயக்குனர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. அவர்களும் மீனாட்சியிடம் சென்று விபரத்தை விளக்க,’ மீனாட்சியோ வெடிக்கக் காத்திருந்த வெய்யக் காலத்து பஞ்சி ஓலக்காத்து வீசியதும் ஊரெல்லாம் பரவி பத்திக்குமே அந்த மாதிரி காட்சிக்குத் தேவைப்பட்டால் கழுத்தை வெட்டிக்கூட வீசுவேன் என மீனாட்சி வீராவேசம் பேச, பஞ்சைப் பத்த வச்ச சந்தோசத்தோட உதவி இயக்குனர் குழு தாய்க் கோழியிடம் ஓடியது.

Nermugam Movie Stills (6)அடடா, “லிப்லாக் சீன் பின்னிடும் என அபார சந்தோசத்தோட இயக்குனர், ஹீரோவை வரவச்சி சீனை விளக்க, வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கின மாதிரி பதறிப் போனார் ஹீரோ. சார் லிப்லாக்கா? ஆளை விடுங்க.. எப்படியாவது இதை இல்லாம பாத்துக்கோங்க என பதற்றமாய் பறஞ்சியிருக்கிறார். ஹீரோயினும் தன் பங்குக்கு சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் எதுக்கும் மசியாத ஹீரோவோ அமுக்கமாய் ரூமுக்குள் போய் அமுங்கிக்கொண்டார். ஹீரோவின் இந்த காரியத்தால் மொத்த டீமும் பகீராகி நின்றிருக்கிறது. கிடைச்ச கேப்புல கெடா வெட்டுற ஆர்யாக்களுக்கு மத்தியில் லிப்லாக்குக்கு காட்டுக்குள் காததூரம் ஓடிப்போற ஹீரோவா? அதுவும் ஹீரோயினே ஓகே என டிக் அடிச்ச பிறகும்…? என்னடா இது? சினிமாவுக்கு வந்த கலிகாலம் என விக்கித்து நின்றது மொத்த டீமும். (கவனிக்க: முத்தத்தால் விக்கித்துப்போன மொத்த டீம்! என ரைமிங்கா டைட்டில் வைக்கலாம்)

Nermugam Movie Stills (9)சரி ஹீரோயினுக்குத்தான் பிரச்சனை.. இவருக்கென்ன? என இயக்கமும் ரூமுக்குள் சென்று கலக்கத்தில் கேட்க, ஹீரோவோ, சார் நான் கல்யாணமானவன், வீட்டில் டைவர்ஸ் வரைக்கும் போயிடுவாங்க. படம் நடிக்கணும் என்பது என் கனவு.. அதனாலத்தான் தயாரிச்சி நடிக்க வந்திருக்கேன். பத்து மாடியிலிருந்து குதிக்கச் சொல்லுங்க குதிக்கேன். தயவுசெய்து இது மட்டும் வேணாமே என கேட்டுக்கொள்ள, இயக்குனரும் இசைந்திருக்கிறார்.

ஹீரோ மட்டும் தயாரிப்பாளராக இல்லாமலிருந்தால் என்னவாகியிருக்கும்? சைடில நின்றிருக்கும் வேறு ஏதாவது வெள்ளைத்தோல் போர்த்திய ஆண்மகனுக்கு முத்த விளையாட்டின் அதிர்ஷ்டம் அடித்திருக்கும். ம்.. தயாரிப்பாளரும் அவரே ஆச்சே… என்ன பண்ண? காட்சியைத்தானே மாத்த முடியும்? காட்சி வேறு ஜோடிக்கு மாத்தப்பட, பெருமூச்சிவிட்டது பெருங்காடு.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles