ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி “ வஜ்ரம் “
அனைவருக்கும் கல்வி
காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம்
இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம்….
இந்த கருத்தை மையமாக வைத்து வஜ்ரம் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இக்கருத்து அனைத்து மக்களிடம் சேரவேண்டும் என்ற நோக்கில் குழந்தைகள் தினமான வரும் நவம்பர் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் அழைத்து மாரத்தான் போட்டி நடத்துகிறோம்.
இதனால் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கல்வியின் அவசியமும், முக்கியத்துவமும் போய் சேரும் என்பது எங்கள் நோக்கம். இதற்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
வஜ்ரம் படக்குழு