சந்தானம் தயாரிப்பில் உருவாகும் படம் இனிமே இப்படிதான் படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. இதில் முக்கிய விருந்தினர்களாக சந்தானம் நட்பு வட்டராம் பிடித்த மனிதர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் அதில் ஒருவர் நம்ம S.T.R, அதாங்க சிம்பு என்ற சிலம்பரசன் சினிமாவுக்கு வந்து இதுவரை மூணு பேர மாத்தின சிம்பு இவர் பேசும்போது சந்தானத்த வாழ்த்த வந்தாரா இல்ல அவர பத்தி பேசவந்தார என்று அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் புரியல ஆனா ஒன்னு மட்டும் புரிந்தது அவர் வாழ்கை மேல நம்பிக்கை இழந்து விட்டார் என்பது மட்டும் அவர் பேசும் போது புரிந்தது.
சிம்பு பேசும் போது சந்தானத்தை நான் அறிமுகம் செய்தேன் என்று சொன்னது தப்பு அவர் திறமையை கண்டுபிடித்தேன் என்பது தான் உண்மை என்று சொன்ன போது எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்த போது உடனே தன் வாழ்கையை பற்றி பேசி எல்லோரையும் நெளிய வைத்தார். கடந்த ரெண்டரை ஆண்டு என் வாழ்க்கைல ரொம்ப இழந்துட்டேன் நான் சம்பாதிச்ச காசு முழுதும் என் அம்மாவிடம் குடுத்துடேன்.அதுனால கைல காசு இல்ல, நண்பர்கள் இல்ல, காதலிச்ச பொண்ணும் போய்ட்டா படங்களும் ரீலீஸ் ஆகல இப்படி எல்லாத்தையும் இழந்துட்டேன் கடைசிய என் கிட்ட உயிர் மட்டும் தான் இருந்தது என்று புலம்பினர் சிம்பு. அவர் பேசியது அவருக்கு புரிந்ததா என்பது அரங்கில் அனைவருக்கும் சந்தேகம்.
உங்கம்மா கிட்ட குடுத்த காசு எங்க போக போது அப்ப உங்க அம்மா காச ஏமாத்திட்டாங்கனு சொல்ல வரிங்கள. காதலி போச்சுன்னு சொன்னிங்க இது என்ன முதல் காதலா படம் ரீலீஸ் ஆகலைன்னு சொன்னிங்க யாரால மத்த இயக்குனர் தயாரிப்பாளர் சரி உங்க அப்பா தயாரித்த படம் இது நம்ம ஆளு ஏன் ரீலீஸ் ஆகல எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டு மத்தவங்கள ஏன் குறை சொல்லுரிங்க சரி உயிர் மட்டும் இருக்குனு சொன்ன நீங்க உங்க நம்பிக்கை எங்க போச்சு இன்னிக்கி நாலு படம் ரீலீஸ் ஆகாம இருக்கு அதுக்கு யார் காரணம் மற்றவர்கள் மேல் பழி போடுவதை விட என்ன தப்பு நடந்தது என்று யோசிங்க பாவம் உங்க அம்மா கிட்ட குடுத்த காசு போச்சுன பாக்குறவங்க சிம்பு அம்மா சிம்புவை ஏமாத்திட்டாங்கனு தானே பேசுவாங்க