.
.

.

Latest Update

விக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக நடித்திருக்கும் ‘வீரசிவாஜி’


Veerasivaji Movie Stills (31)ரோமியோ ஜூலிட் வெற்றி படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – D.இமான், எடிட்டிங் – ரூபன், வசனம் – ஞானகிரி, சசி பாலா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை – லால்குடி இளையராஜா, நடனம் – தினேஷ், ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன், கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்.

Veerasivaji Movie Stills (18)படம் பற்றி இயக்குனர் கணேஷ் வினாயக்கிடம் கேட்டோம்.. இதில் ஆக்ஷன் கலந்த பேமிலி எண்டர்டைன்மென்ட் சப்ஜெக்ட். கதாநாயகன் சிவாஜி ஒரு கால் டாக்சி டிரைவர். பாண்டிச்சேரியிலிருந்து கன்யாகுமரி வரையிலான ஒரு பயணத்தின் போது நடக்கும் பரபரப்பான சம்பவம் தான் திரைக்கதை ! படத்தின் பெரும்பகுதி பாண்டிச்சேரியில் நடைபெற்று விட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது என்றார் இயக்குனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles