சமீபமாக திரைக்கு வர உள்ளப் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ”பிச்சைக்காரன்’ ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் எதிர்ப்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது. இயக்குனர் சசியின் நேர்த்தியான கதை மற்றும் இயக்கம் , விஜய் அண்டனியின் யதார்த்தமான நடிப்பு, பிரமிப்பூட்டும் இசை, என்று எல்லா அம்சங்களும் நிறைந்த ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு இப்பொழுது ‘U’ சான்றிதழ் கிடைத்து உள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ள கே ஆர் films சரவணன் கூறும் போது ‘ இந்தப் படத்துக்கு ‘U’ சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம் . இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள ‘பிச்சைக்காரன்’ திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது ‘ என்றார்.