.
.

.

Latest Update

எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும் ‘எமன்’


Yeman First Look Poster (2)விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தை தயாரிக்கும் லைகா productions. திரைப் பட தயாரிப்பில் தன்னிகரற்று வளர்ந்து வரும் லைகா productions நிறுவனம் தரமான கதைகளையும் , வர்த்தக ரீதியாக வெற்றி பெறக் கூடிய நட்சத்திரங்களையும் , இயக்குனர்களையும் வைத்து படம் தயாரித்து வருகின்றனர்.

நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி , தொடரும் வெற்றிகளால் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள விஜய் ஆண்டனியை தங்களது அடுத்த தயாரிப்பான ‘எமன்’ படத்துக்கு கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து உள்ளனர் .வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கரே இந்தப் படத்தையும் இயக்க இருப்பதுக் குறிப்பிடத் தக்கது. கதாநாயகனாக நடிப்பதோடு, இசை அமைக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. கதை இயற்றுவதோடு, ஒளிப்பதிவு செய்வதோடு,இயக்கவும் செய்கிறார் ஜீவா ஷங்கர். செல்வாவின் கலை வண்ணத்தில், வீர செந்தில் படத்தொகுப்பு செய்ய, ஷெரிப் நடனம் அமைக்க, திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை அமைக்கிறார்.

விஜய் ஆண்டனியுடன் இணைவது என்பது என்னை பொறுத்த வரை தாய் வீட்டுக்கு வருவதை போன்றது தான். ‘நான் ‘திரை படத்தில் இருந்து இன்று வரை அவருடைய அசுரத் தனமான வளர்ச்சி என்பது அவரது உழைப்புக்கு சான்று.

எமன் படக் கதை ‘நான்’ படம் இயக்கும் போதே என்னிடம் தயாராக இருந்தது.அந்தக் காலக் கட்டத்தில் அந்தக் கதையை நான் நல்ல மாஸ் இமேஜ் உள்ள ஸ்டார் நடிகருக்கு செய்தது வைத்து இருந்தக் கதை. இன்று அந்தக் கதைக்கு முற்றிலும் பொருத்தமாக விஜய் ஆண்டனி வளர்ந்து இருப்பதே அவரது வெற்றிக்கு அத்தாட்சி.

‘எமன்’ தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். நாம் பொதுவாக எண்ணுவதைப் போல் எமன் என்பவர் மரணத்துக்கு மட்டுமே கடவுள் அல்ல. அவர் தர்மத்தை காக்கும் கடவுளும் ஆவார். இந்தப் படத்தின் கதைக் கரு வரும் நாட்களில் பேசப்படும் படமாக இருக்கும்.

‘எமன் ‘முற்றிலும் ஜனரஞ்சகமான , எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். தமிழ் திரை ரசிகர்களுக்கு தரமான பொழுது போக்குப் படங்களை தர வேண்டும் என்று தீர்மானமான முடிவுடன் இருக்கும் லைகா productions நிறுவனத்தினருக்கு முற்றிலும் ஏற்றப் படமாக இருக்கும் ‘எமன்’ என்றுக் கூறினார் இயக்குனர் ஜீவா சங்கர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles