இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியது ; நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ?? ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ?? அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன். எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்து தான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும் இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தியும் , அருளும் எந்த ஒரு காட்சியிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள் மற்றும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாது.
படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்த தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைத்தோம். படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்க்கிறார்கள். கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹரிஷ் கல்யாணம் வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வாருவார்கள். படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை. உண்மைக்கு அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நாங்கள் கோவையில் படம்பிடித்தோம். கோவையை மிகவும் துல்லியமாகவும் , புதிய கோணத்திலும் படம்பிடித்துள்ளோம்.
சென்னையில் மட்டுமில்லை கோவையிலும் சேரி பகுதி உள்ளது. நாயகன் ஸ்ரீ கோவையில் உள்ள சேரி பகுதி பையனாக வருகிறார். மற்றொரு நாயகனான ஹரிஷ் கல்யாண் விஸ்காம் படித்து முடித்து சினிமாவுக்கு தான் போகவேண்டும் என்று இல்லாமல் வீடியோ கடை வைத்து முன்னரே வேண்டும் அப்படியும் முன்னேற முடியும் என்று வாழ்ந்து வருபவர். சேரி பகுதியில் இருக்கும் ஸ்ரீ சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்பவராக வருகிறார். ஹரிஷ் கல்யாண மற்றும் அவருடைய தந்தைக்கிடையே படத்தில் நடிக்கும் காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஹரிஷ் கல்யாணின் நிஜ தந்தை தான் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே , சமஸ்க்ரிதி மற்றும் சாந்தினி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளன நவீன் இசையில் அனிருத் ரவிசந்தர் பாடியுள்ள ”ஆள சாச்சிபுட்ட கண்ணால “ பாடல் மிக பிரபலம். இந்த சூப்பர் ஹிட் பாடல் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது.