கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் தயாரிப்பில், விஷால் நடிக்கும் புதிய படம் “மருது” மிகப்பெரிய பட்ஜெட்டில் முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. நடிகை ஸ்ரீ திவ்யா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். குட்டிபுலி,கொம்பன், படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.