.
.

.

Latest Update

‘வி சென்னை வாரியர்ஸ்’ டென்னிஸ் அணியை வாங்கிய பிரபு தேவா…


V Chennai Warriors Launch Stills (6)உலக பிரசித்திப் பெற்ற பிரபல டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜும் , தனது நடன ஆற்றலால் உலகெங்கும் பிரசித்தி பெற்ற பிரபு தேவாவும் ஒன்றாக இணைந்தால் அது மாபெரும் செய்தியாக தான் இருக்கும். கிரிக்கெட்டில் I P L இருப்பதைப் போன்று டென்னிசில் விஜய் அமிர்தராஜ் நிறுவி உள்ள The Champions Tennis league அமைப்பில் வி சென்னை வாரியர்ஸ் என்ற பெயரில் இயங்க உள்ள சென்னைக்கான அணியை பிரபு தேவாவும் , வேல்ஸ் பல்கலை கழகத்தின் வேந்தரும் V Chennai Warriors Launch Stills (7)நிறுவனருமான ஐசரி கணேஷும் வாங்கி உள்ளனர்.இதற்கான துவக்க விழா சென்னையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் வி சென்னை வாரியர்ஸ் அணிக்கான இணைய தளம், மற்றும் அந்த அணிக்கான promotion பாடல் ஒன்றும் வெளி இடப் பட்டது. ‘டென்னிஸ்னா சென்னைதான்’ என்றக் கருத்தை ஆழபதிக்கும் இந்தப் பாடலுக்கான இசையை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். பிரபு தேவா சுழன்று , சுழன்று ஆடும் இந்தப் பாடல் சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ‘ வி ‘ என்றால் விஜய் அமிர்தராஜ் , விஜய் அமிர்தராஜ் என்றால் டென்னிஸ், வி என்றால் வெற்றி ,என்றும் இந்த அணியை வாங்கியது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்றும்,சர்வதேச அளவில் நமது நாட்டின் வீரர்கள் மேலும் கலந்துக் கொண்டு பெருமை சேர்ப்பது இத்தகைய போட்டிகளால் தான் சாத்தியம் எனக் கூறினார் வேல்ஸ் பல்கலை கழகத்தின் , நிறுவனருமான ஐசரி கணேஷ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles