கிருஷ்ணா – சுவாதி ரெட்டி இணைந்து நடிக்க, குழந்தை வேலப்பன் இயக்கும் படம் யாக்கை .
இந்தப் படத்துக்காக யுவன் இசையில் உருவான, ”நீ…” என்று துவங்கும் ஒரு பாடல் சிங்கிள் டிராக் ஆக, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியானது .
வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது
ஆம்! பாடல் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் வியப்பான வேகத்தில் இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு , சமூக வலைதளங்களில் ‘நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது .
இயக்குனர் கவுதம் மேனனும் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி yuvan is back என்று ட்வீட் செய்துள்ளார் .
ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல் அதற்குள் யூ டியூபில் ஒரு லட்சம் பேரால் பாரக்கப்பட்டு உள்ளது இந்த பாடல் .