ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் மற்றும் டாக்டர்.செல்வ. தியாகராஜன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “சாலையோரம்”
பி. வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.மூர்த்திகண்ணன் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்தியாவிலேயே இதுவரை வெளிவந்திராத புதிய கதைக்களத்தை இப்படத்தில் கையாண்டிருக்கிறார். அருகிலிருக்கும் மனிதர்களின் அறியப்படாத உணர்வுகளை சுவாரஸ்யமாக திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
ராஜ், செரீனா அறிமுகமாக பாண்டியராஜன், சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன், ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக சிங்கப்பூரைச்சேர்ந்த சேது ராம் அறிமுகமாக, பின்னணி இசைகோர்ப்பு மரியா மனோகர் அமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத வேல்முருகன், பிரசன்னா, மஹதி, பெள்ளிராஜ், பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர்.
நாகை, காரைக்கால், கொடைக்கானல், பகுதிகளில் முடிந்து இறுதிகட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடந்திருக்கிறது.