.
.

.

Latest Update

ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் “ வஜ்ரம் “


ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும்
“ வஜ்ரம் “
இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார்.
இந்த படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவு – A.R. குமரேசன்
இசை – F.S.பைசல்
பாடல்கள் – சினேகன்
வசனம் – லோகிதாஸ்
எடிட்டிங் – மாரீஸ்
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர்
கலை – மகேஷ்.N.M
நடனம் – விஜய், ராஜ்விமல்
நிர்வாக ஆலோசகர் – G.S.செந்தில் ஜெயன்
தயாரிப்பு நிர்வாகம் – சிவசங்கர்
தயாரிப்பு – P.ராமு
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – S.D.ரமேஷ்செல்வன்
படம் பற்றி இயக்குனர் கூறியது….
ஒரு ஆசிரியர் நினைத்தால் காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்த முடியும் என்ற ஆழமான நம்பிகையை ஆசிரியர்கள் மீது வைத்திருக்கும் ராமையா. தனது சொந்த ஊரான மலை கிராமத்தில் கல்வி கிடைக்காத சூழ்நிலையை உணர்ந்ததின் விளைவாக, இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் நீர், நிலம், காற்று எப்படி அவசியமோ. அதேபோல ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி அவசியம் என்ற கொள்கையோடு தான் வாழ்நாளை அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தன்னை அர்ப்பணித்து, அனாதைகளாய் கிடந்த நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தத்தெடுத்து அவர்களோடு, தங்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், தேயிலை தோட்டத்திலும், சாக்லேட் கம்பெனிகளிலும் பணியாற்றும் சிறுவர்களுக்கும் கட்டாயம் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணத்தில் சாலை வசதி கூட இல்லாத அந்த மலை கிராமத்தில் ஒரு பள்ளியை நிறுவி கல்வியை ஊக்குவித்து வருகிறார்.
இந்த நிலையில் ராமையாவின் எதிர்பார்ப்பை மீறி அப்பள்ளியில் மாணவர்களின் எணிக்கை அதிகமாவதால் ஆசிரியர்களின் தேவைக்காகவும், பள்ளியை நிர்வகிக்க தேவையான வசதிகள் வேண்டி அரசின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக பல வருடங்களாக போராடி வருகிறார்.
கல்வித் தந்தை என்ற அடையாளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செல்வந்தர், கல்விக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்வதாக கூறி அப்பள்ளி விழாவிற்கு வருகிறார். அப்பள்ளியின் ரம்மியமான சூழலை பார்த்த செல்வந்தர் அதில் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்ட முயற்சித்து ராமையாவிடம் பள்ளியை விலை பேசுகிறார்.
இதை சற்றும் எதிர்பாராத ராமையா செல்வந்தரின் தவறான நோக்கத்தை புரிந்து கொண்டு தன் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் கோபமடைந்த செல்வந்தர் குறுக்கு வழியில் ராமையாவிடம் அப்பள்ளியை அபகரித்து மேலும் பழி சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்.
இறுதியில் அந்த நான்கு சிறுவர்கள் ராமையாவையும், பள்ளியையும் எப்படி மீட்கிறார்கள் என்பதே திரைக்கதை.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles