.
.

.

Latest Update

ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் தயாரிக்கும் “ காதல் போல் வேறேது ”


“ காதல் போல் வேறேது ”
ஸ்ரீ விஜயலக்ஷ்மி அம்மா மூவீஸ் பட நிறுவனம் சார்பாக ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் “காதல் போல் வேறேது”
இந்த படத்தில் எஸ்.ஆர்.அருண்ராஜ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கிருஷ்ணபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயகிருஷ்ணன், ஸ்ரீவித்யா, வாசுதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – விமல்முருகன்
இசை – ஸ்ரீகோபிநாத்
பாடல்கள் – பாமரன், மீனாட்சிசுந்தரம், எஸ்.எம்.சாமி, சுரேஷ்நாராயணன்,நவீனா.
எடிட்டிங் – D.வரதராஜன். ஸ்டன்ட் – திகில்முகேஷ்
நடனம் – சரண் பாஸ்கரன். தயாரிப்பு – ஜெயகிருஷ்ணன்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – V.K.சிதம்பரம்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் …. ஹீரோ கண்ணன் ஹீரோயின் தமிழை காதலிக்கிறார், தமிழும் காதலிக்கிறார். ஆனால் இவர்கள் காதல் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாத காதல் அதை சில கெட்ட நண்பர்கள் திசை திருப்பிவிட்டு. கண்ணனை குடிகாரனாக்கி விடுகிறார்கள். இதை அறிந்த கண்ணனின் நண்பர்கள் அவனது எதிர் காலத்தை கெடுக்கும் காதலையும், கெட்ட சகவாசத்தையும் தடுக்க நண்பர்கள் தமிழிடம் அவள் மனம் நோகும் அளவிற்கு பேசி அவளே அந்த காதலை கைவிடும் அளவிற்கு செய்துவிடுகிறார்கள்.அதனால் மனம் உடைந்த கண்ணன் அனைத்திலும் இருந்து விடுபட்டு வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுகிறார்.
முடிவில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் கதை ! படப்பிடிப்பு கன்னியாகுமரி, முட்டம், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles