.
.

.

Latest Update

அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்


Kamal Haasan Narpani Iyakkam Social Welfare Activities Event Stills (22)

கமல்ஹாசனின் 60வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது நற்பணி இயக்கம் சார்பில், 36வது நற்பணி இயக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, கலைவானர் அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் ஏழை எளியவர்களுக்கு தையல் மிஷின், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை நடிகர் கமல்ஹாசன் தலைமையேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய கமல்ஹாசன், சுமார் 30 வருடங்களாக இங்கு இதுபோன்ற விழாக்கள் நடக்கிறது, முதன்முறையாக பத்திரிகையாளர்கள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் மாதிரி நலத்திட்ட உதவிகள் எல்லாம் இவர் செய்கிறார், இவர் எதை நோக்கி போகிறார் என்று சந்தேக கண்ணோடு சிலர் பார்க்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை அரசியல்வாதிகள் நம்மிடமிருந்து தான் கற்று கொண்டுள்ளனர். என்னைப்போலவே மற்றவர்களும் செய்தது சந்தோஷம், ஆனால் கவுரவப்படவில்லை.

இன்றைக்கு பல ரசிகர்கள் மன்றம், நற்பணி மன்றமாக மாறியுள்ளது, இதற்கு எல்லாவற்றுக்கு நான் தான் காரணம் என்று பொய் சொல்ல மாட்டேன், முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம். என் பேச்சை கேட்டு செயலாக மாற்றிய சாத்தியம் உங்களையே சேரும், நாம் இதை 30 வருடங்களாக செய்து வருகிறோம், அதற்காக நாம் தளர்ந்து விடக்கூடாது, நாம் இப்போது தான் துவங்கியிருப்பதாக நினைக்க வேண்டும்.

ஆண்டுதோறும் சரியாக செயல்படாத நற்பணி மன்றங்கை நான் திட்டியிருக்கிறேன், ஆனால் இந்தாண்டு என்னால் திட்டமுடியாது, ஏனென்றால் நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் பலர் வந்துள்ளனர் அதனால் திட்டவில்லை வாழ்த்துகிறேன். நாடு சுத்தமாக பிரதமர் எல்லோரது பெயரையும் உச்சரிக்க முடியாது, என் பெயரை உச்சரித்துள்ளார், நீங்கள் உங்கள் பெயரை நீங்களே உச்சரித்து கொண்டு இந்த கிளீன் இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்படுங்கள்.

முன்பெல்லாம் ரசிகர்கள் என்னிடம் நாமும் அரசியலில் நுழைந்து ஏதாவது செய்யலாம் என்று அடிக்கடி சொல்வார்கள், அப்படி சொன்ன ரசிகர்களே இப்போது, அண்ணே நமக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது அண்ணே நாம் எப்போதும் போல தனித்தே இருப்போம், நமக்கு அரசியல் வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறார்கள், எனது ரசிகர்களே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி போகும் அளவுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள், அவர்களே அப்படி சொல்லும் போது நான் எப்படி அரசியலுக்கு வருவேன். நமது நற்பணி மன்றம் எனக்கு பிறகும், நமக்கு பிறகும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு கமல் பேசினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles