.
.

.

Latest Update

ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகத்தின் மகளின் கல்வி செலவை தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறினார்.


விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகத்தின் மகளின் கல்வி செலவை ஏற்றார். தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாலரும் நடிகருமான விஷால்.

சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13-ஆட்டோக்கள் சேதம் அடைந்தது அதில் ஆடோக்களில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கிவீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இச் சம்பவத்தில் 9-ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தனர்கள் அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா.அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் வயது-29 பரிதாபமாக உயிரிழந்தார் இச் செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாலரும் நடிகருமான விஷால் அவர்கள் அவருடைய குடும்பத்தை தொடர்புக்கொண்டு பேசியபோது ஆறுமுகம் அவருக்கு மணிஷா (வயது-7) என்ற மகள் இருப்பதை அறிந்த உடனே மணிஷா வின் கல்வி செலவை தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி சமாதானம் தெரிவித்தார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles