.
.

.

Latest Update

ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்? படவிழாவில் கலகலப்பு.


ஆர்யாவைப் கதாநாயகிகளுக்குப் பிடிக்க என்ன காரணம் என்று ஒருபடவிழாவில் விவாதிக்கப்பட்டது. யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்’ ..

Yatchan Audio Launch Stills (21)ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ‘யட்சன்’ என்றால் குபேரன்,இயக்குபவன் என்று பொருளாம்.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.அதுவே படத்தின் அறிமுக விழாவாகவும் அமைந்தது. விழாவில் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் பேசும் போது ” இது ‘ஆரம்பம்’ படத்துக்கு முன்பே பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனந்தவிகடனில் வந்த சுபா அவர்களின் தொடர்கதை திரை வடிவம் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் நன்றாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன. கம்போசிங் ,பாட்டு என்று நாங்கள் வெளிநாடு எல்லாம் போய் சிரமப்படவில்லை. திநகரிலுள்ள ஒரே ரூமில்தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் உருவாக்கினோம்.
ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ் என்னுடன் இணைந்துள்ள 2 வது படம். ஸ்டண்ட் சில்வா ,.ஆர்ட் லால்குடி இளையராஜா
ஆர்யாவுடன் இது எனக்கு 5 வது படம். ஆர்யா என் ஹீரோ.அவரைப் பார்த்தாலே எதுவும் கேட்க வேண்டாம். கதை சொல்ல வேண்டாம். எப்ப மச்சான் ஷூட்டிங் போகலாம் என்பவர் .அவருடன் என் தம்பி கிருஷ்ணாவும் இணைந்திருக்கிறார்.நான் எப்போ படம் தொடங்கினாலும்அம்மா உன் தம்பியையும் நடிக்க வைப்பா என்பார்கள் . அவருக்கு ஏற்றமாதிரி கதை அமைந்ததால் இதில் நடிக்க வைத்திருக்கிறேன். ஆர்யா-கிருஷ்ணா இரண்டு பேரையும் நடிக்க வைக்க படாதபாடு பட்டேன். தீபா சன்னதிக்கு நல்ல நடிப்புக்கு இடம் தருகிற பாத்திரம்.யுவன் என் ஆரம்பகாலம் முதல் என்னுடன் பெரியபலமாக தொடர்பவர். நீ எத்தனை ஆல்பம் போட்டாலும் எனக்கு தனியா போட வேண்டும் என்று உரிமையோடு கேட்கிற நட்பு எங்களுடையது.படப்பிடிப்பே ஜாலியாக கலாட்டாவாக போனது.” என்றார்.பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது ” நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒருநட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்கு எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போனதில்லை நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா? இதுவரை தெரியாது,இப்போது புரிகிறது.நட்புக்குஅவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்.
இதுவரை மூவாயிரம் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் பிரஸ்மீட் வைத்து பாட்டெழுத மாட்டேன் என்று சொன்னதில்லை நடிக்க வந்தபிறகு அப்படி பரப்பி விட்டார்கள். இதன் பாடல்களும் ,’சர்வம்’ படத்துக்குப்பிறகு இந்தப்படமும் பெரிய வெற்றியடையும் ”என்றார்.இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பேசும்போது ” இந்த விஷ்ணுவர்தனின் படத்துக்கு மட்டும் யுவன் என்ன ஸ்பெஷலாக செய்திருக்கிறார் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்கிறார்கள். விஷ்ணுவர்தனின் துறுதுறுப்பும் எனர்ஜியும் பழகினாலே நமக்கும் வந்து விடும் .அவரை பள்ளி நாட்களிலிருந்தே தெரியும். நல்லதோ கெட்டதோ முகத்துக்கு நேரே சொல்பவர் .”என்றார்.கிருஷ்ணா பேசும் போது ”ஆர்யாவுடன் சேர்ந்து நடித்தது செம ஜாலியாக இருந்தது..என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் ஏன் அண்ணன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பார்கள் இனி இதைக் கேட்க மாட்டார்கள் .என் முதல் இரண்டு படமும் தோல்வி அடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது அண்ணன் ‘நேரம் வரும்போது நாம் இணையலாம் ‘என்று கூறினார். என் படங்களுக்கு யுவனின் இசை அடையாள அட்டையாக இருந்து வெற்றி பெற்றுத்தந்தது. ‘கழுகு’ படவெற்றிக்கு100 சதவிகித காரணம் யுவன் இசைதான்” என்றார்.ஆர்யா பேசும்போது “என்னைநடிக்க வைத்து யூடிவியில் பலபடங்கள் எடுத்த போதும் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்கள்.எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள். விஷ்ணுவர்தனிடம் நான் கதை கேட்பதில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் ஆறேழு மணிநேரம் போகும் ஆறேழு மணிநேரம் கதை சொல்வார் அவருடைய பொறுப்பை விடமாட்டார் எனவே நான் கதை கேட்பதில்லை.
நான் இதுவரை நடித்தவை 25 படங்கள், என் எல்லாப் படங்களுக்கும் யுவன்தான் இசை என்கிற அளவுக்கு நிறைய செய்துள்ளார் .என் சினிமா பயணம் ‘தீப்பிடிக்க’ பாடலில் தொடங்கியது அதுமுதல் ‘தீப்பிடிக்க’ பாட்டில் நடித்த பையன் என்று அடையாளம் வந்தது. அது இன்னும் தொடர்கிறது காரணம் யுவன்..’சர்வம்’ படத்துக்கு பிறகு ‘யட்சன்’ படமும் பேசப்படும் .இதில்கிருஷ்ணா புது கிருஷ்ணாவாக வருவார் கிருஷ்ணாவுடன் நடித்ததில் திருப்தி. அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்துள்ள தீபா சன்னதி அழகான நடிகை.இந்தப் பட அனுபவம் ஜாலியாக இருந்தது.” என்றார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சுபா, நடிகை தீபா சன்னதி, ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தயாரிப்பாளர் யூடிவி ஜி.தனஞ்ஜெயன் ஆகியோரும் பேசினார்கள்.ஆடியோ சிடியை எழுத்தாளர்கள் சுபா வெளியிட யுவன் சங்கர்ராஜா பெற்றுக் கொண்டார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles